கோவையில் - மயிலாடுதுறை, கோவை - காட்பாடி இடையே இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோவை - மயிலாடுதுறை இடையிலான ஜனசதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களில் இயங்கும். கோவையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் ரயில் பகல் 1.40 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும். மயிலாடுதுறையில் பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்படும் ரயில் இரவு ஒன்பதே கால் மணிக்குக் கோவையைச் சென்றடையும்.
திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நிலையங்களில் ஜனசதாப்தி சிறப்பு ரயில் நின்று செல்லும்.
கோவை - காட்பாடி சிறப்பு ரயில் வாரத்தின் 7 நாட்களும் இயங்கும்.
கோவையில் இருந்து காலை ஆறேகால் மணிக்குப் புறப்படும் ரயில் பகல் 11.50 மணிக்குக் காட்பாடி சென்றடையும். காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்குப் புறப்படும் ரயில் இரவு பத்தேகால் மணிக்குக் கோவை சென்றடையும். சிறப்பு ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்ப்பேட்டை நிலையங்களில் நின்று செல்லும்.