இன்றுடன் மீன்படி தடைக்காலம் முன்கூட்டியே முடிவுக்கு வருவதால் நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையும் தடை விதிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கில் முன்னெச்சரிக்கையாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 17 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்ததால் மீன்பிடி தடை காலத்தை 47 நாட்களாக மத்திய அரசு குறைத்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.