மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், நாளை முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை மீனவர்கள் அரபிக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.