செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் இடத்திலேயே ஊதியம் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு வேண்டுகோள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

May 30, 2020 03:07:56 PM

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு, கூலியை பணிபுரியும் இடத்திலேயே வழங்க வேண்டும் என வங்கிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலர்கள், நபார்டு வங்கியின் அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியின் மூலம் மானியத்துடன் கடனுதவி, நடப்பு நிதியாண்டுக்கு உத்தேசிக்கப்பட்ட ஆண்டு கடன் திட்டம் குறித்து இதில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயத்திற்கான கடனுதவியை உடனுக்குடன் வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன, இவற்றின் மூலம் சுமார் 1 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், சிறு, குறு, தொழில் நிறுவனங்களின் பங்கு 30 சதவீதம் என முதலமைச்சர் குறிப்பிட்டார். எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு அறிவித்துள்ள 3 லட்சம் கோடி ரூபாயில், தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் கிடைக்கச் செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


Advertisement
மின் சாதன விற்பனையில் ஈடுபட்டுவரும் 'டார்லிங்' குழுமத்தின் புதிய வணிக முயற்சி..
சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்...
பட்டினப்பாக்கம் கடற்கரையில் புதிதாக பொருத்தப்பட்ட மின் விளக்கு.. குற்றச்செயல்களை தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை..
தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்
சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..
தமிழகம் முழுவதும் ஆயுதப்பூஜை விழா கோலாகலமாக கொண்டாட்டம்
ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்
அருப்புக்கோட்டையில் ஆபத்தான முறையில் 200 பேர் வரை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கில் அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
தி.மு.க கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது: ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

Advertisement
Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..

Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்

Posted Oct 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பைக்கில் ட்ரிபிள்ஸ் போவோம்.. போர்ஸ் போவோம்.. பைவ்ஸ் போவோம்.. விபத்தில் சிக்கினா ஓடிப் போவோம்..! மாஸ்டர் பட தயாரிப்பாளரின் லாரி மோதியது

Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பருத்தி வீரன் பாணியில் விபரீத சம்பவம் செய்த வில்லங்க மாப்பிள்ளை..! 2k கிட்ஸ் எல்லாத்திலும் அவசரமா ?

Posted Oct 11, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா


Advertisement