தமிழ்நாட்டில் கடந்த ஒருமாதமாக மக்களை வாட்டி வதைத்த கத்திரிவெயில் இன்றுடன் விடைபெறுகிறது.
கடந்த 4ஆம் தேதி, அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் துவங்கியது. கொரோனா ஒருபக்கம் உலுக்க, சுட்டெரிக்கும் அனல் காற் றால் பகலில் புழுக்கம், இரவில் கொசு கடி என மும்முனை தாக்குதலில் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், கத்திரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது. எனவே, அடுத்தடுத்த நாட்களில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற் கிடையே, திருத்தணியில் 105 புள்ளி 8 டிகிரியும், வேலூரில் 105 புள்ளி 44 டிகிரியும், கரூர் பரமத்தியில் 104 புள்ளி 9 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 104 புள்ளி 3 டிகிரியும், திருச்சி மற்றும் சேலத்தில் தலா 102 புள்ளி 3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
class="twitter-tweet">இன்றுடன் தமிழகத்திலிருந்து விடைபெறுகிறது, கத்திரி வெயில் #AgniNakshatram https://t.co/KjhnTiutdE
— Polimer News (@polimernews) May 28, 2020