கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து ஜூன் 8ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், அந்த அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அதை ஏற்று, ஜூன் மாதம் 8ம் தேதி ((8.6.2020)) முதல் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை(28.2.2021) வரை நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 850 கன அடிவிதம் தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அறிவிப்பில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.