விமான மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளை அழைத்துச் செல்ல ஆட்டோக்கள், டாக்சிகளை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு தொடர்பான உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தளர்வுகளுடன் 4-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதித் தளர்வுகள் தொடர்பான அரசு உத்தரவில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் காரணங்களின் அடிப்படையில், வாடகை ஆட்டோக்கள், டாக்சிகள், ரிக் ஷாக்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட என்ற வகைப்பாட்டில் விமான மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளை அழைத்துச் செல்லுதல் என்ற அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.