திருச்சியில் பணியிட மாறுதலை கொண்டாடும் விதமாக மது அருந்திவிட்டு, பிறருக்கு தொல்லை செய்யும் விதத்தில் நடந்துகொண்டதாக 9 சிறைக் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வந்த 37 காவலர்களுக்கு மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு பணியிட மாறுதல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதனை கொண்டாடும் வகையில் அவர்களில் சிலர் கொட்டப்பட்டு சிறைக்காவலர் குடியிருப்பில் மது விருந்து வைத்ததோடு, ஒரு இருசக்கர வாகனத்தில் 3, 4 பேர் அமர்ந்து கூச்சலிட்டவாறே குடியிருப்பில் சுற்றி வந்தாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.