நாடு முழுவதும் 61 நாட்களுக்குப்பின், நாளை முதல் மீண்டும் விமான சேவை துவங்குவதையொட்டி, பயணிகள் கடை பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய - மாநில அரசுகள் வெளியிட்டு உள்ளன.
இதன்படி, கட்டாய முக கவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், தனிநபர் இடைவெளி யை கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விமான நிலையத்தின் அனைத்து பணிகளும் முழுக்க முழுக்க ஆன் - லைன் முறையில் செயல்படுத்தப்படும். எனவே, உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? என்ற விவரங்களை, விமான பயணிகளே, பதிவிட வேண்டும். தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அறிகுறி இருந்தால் விமான பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.