கோயில்கள் திறக்கப்படும்போது தான் சலுகை விலை திருப்பதி லட்டு தமிழகத்தில் கிடைக்கும் என தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை என்பதால் பிரசாதம் மட்டும் வழங்க முடிவு செய்து 50% தள்ளுபடி விலையில் ஒரு லட்டு 25 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல தமிழகத்திலும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் தினசரி சென்னை தி. நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நேரரில் வந்து அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் விசாரித்துவிட்டு செல்வதாகவும், ஆனால் தற்போது தமிழகத்தில் இதுவரை லட்டு விற்பனைக்கு வரவில்லை என்றும் இங்கு கோவில்கள் எப்போது திறக்கப்படுமோ அப்போதுதான் சலுகை விலை லட்டுகள் கிடைக்கும் எனவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.