திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்து அறிவிப்பில், நாளை காலை 10 மணிக்கு தனது தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாகிகள் மீது வழக்குகள் புனைவது, கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.