ஓய்வு பெற்ற பேராசிரியர்களை பல்கலைக்கழகங்களில் கௌரவ விரிவுரையாளர்களாக மீள் பணியமர்த்த உயர்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், தற்காலிக விரிவுரையாளர்கள் என பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல், இந்த நடைமுறைக்கு தடை விதித்து அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பேராசிரியர்களை மீள் பணியமர்த்துவதன் மூலம் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்த ஆட்சிமன்றக் குழு முடிவு செய்திருந்த நிலையில், அதற்கு பல்வேறு பேராசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.