அம்பன் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயல் கரையை கடந்ததால் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு மேற்கு - வட மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதால் அனல் காற்றும் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகலில் கடலோர மாவட்டங்களில் கிழக்கு - தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால், அதிலுள்ள அதிகளவிலான ஈரப்பதத்தினால் புழுக்கம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு இந்த நிலை நீடித்தாலும், அதன்பின்னர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.