தமிழகத்தில் மின் கட்டணத்தை ஜூன் 6 ஆம் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் வரும் ஜுன் 5 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோர், வரும் ஜுன் 6 ஆம் தேதி வரை அபராதம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மின்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது