புதுச்சேரியில் அம்பன் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்களில் கரையோரங்களில் இருந்த வீடுகள் சேதமடைந்தன.
புதுச்சேரியை ஒட்டிய விழுப்புரம் மாவட்ட பகுதியான பொம்மையார்பாளையத்தில் கடற்கரையோரம் இருந்த 2 வீடுகள் சேதமடைந்தன. அப்பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பன் புயல் காரணமாக சென்னை மெரீனா, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. வழக்குத்துக்கு மாறாக பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பின. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லாததால் படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.