கொரோனாவை கண்டு மக்கள் பீதி அடையவோ அல்லது பதற்றம் அடையவோ வேண்டாமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை - தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு மிகவும் குறைவு என்றும், வைரஸ் தொற்று பரிசோதனைகளை குறைக்கவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.