தமிழகத்தில் திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவின.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என உறுதிபடத் தெரிவித்தார். வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்களைச் சொந்த மாவட்டத்திற்கு அழைத்து வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.