தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை சேர்ந்த, 10ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் அனுப்பியுள்ள உத்தரவில், வட்டாரத்துக்கு இரண்டு என்ற விகிதத்தில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்காக மாநிலம் முழுவதும் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து சிறப்புத் தேர்வு மையத்துக்கு சென்று வர மாணாக்கர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரவும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.