உச்சநீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து, மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று, தமிழ்நாடு மாநில வாணிப கழகமான டாஸ்மாக் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் மதுக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும், நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடைக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது