தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு, மெல்ல குறைந்து வருகிறது. ஒரே நாளில் 434 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து விட்டது.
தமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆவோர் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் நாளுக்கு நாள், படிப்படியாக குறைந்து வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 434 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 108ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது
7 ஆயிரத்து 435 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, 4 ஆயிரத்து 598 பேர், தனிமை வார்டுகளில் தங்கவைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்த 53 வயது பெண் ஒருவரும், 32 வயது ஆண் ஒருவரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த 57 வயது ஆண் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் மற்றொரு 61 வயது ஆண் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் இறந்தனர். தூத்துக்குடியை சேர்ந்த 34 வயது ஆண் , தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
எனவே, ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததால், கொரோனா உயிர்ப்பலி 71 ஆக உயர்ந்தது.
முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஒரே நாளில் 359 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை, 2 ஆயிரத்து 599 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களில், 12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை 318 சிறுவர்கள் உள்பட 583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 2 ஆயிரத்து 933 பெண்கள், 3 திருநங்கைகள் உள்பட மொத்தம் 8 ஆயிரத்து 812 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 265 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 713 பேர் கொரோனா
வால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடை.யே, வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வந்த பலர், சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களிலும், பிற மாவட்டங்களிலும், தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.