தவறான மருந்தை தம்மிடம் வந்த நோயாளிகளிடம் ஏமாற்றி விநியோகித்து, பரிசோதிக்க முயற்சி செய்ததாக போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது, மேலும் ஒரு புதிய புகார் எழுந்துள்ளது.
கொரோனா மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறி, சமூக வலைதளங்களில் பல வீடியோக் களை வெளியிட்டு, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போலி சித்தமருத்துவர் தணிகாசலம் கடந்த 6 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற காவலில் வைக் கப் பட்ட தணிகாசலத் தை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, சைபர் கிரைம் தனி பிரிவு அதிகாரிகள் விசார ணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்டமாக, தணிகாசலம் மருத்துவ படிப்பிற்கான சான்றி தழ்கள் வைத்துள்ளாரா? அவ்வாறு சான்றிதழ் இருப்பின் அது உண்மை தானா, எங்கு கல்வி பயின்றார்? என்கிற அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. பிரதான குற்றச்சாட்டான கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக கூறியிருந்தது குறித்து, 3 - வது நாளாக தணிகா சலத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஒரு மருந்தை கண்டு பிடித்த தணிகா சலம், அதனை முறையாக பரிசோதிக்காமல் தம்மிடம் வரும் நோயாளி களிடம் கொரோனா வைரஸிற் கான மருந்து என கொடுத்து பரிசோதிக்க முயற்சி செய்ததாக சைபர் கிரைம் காவல்துறைக்கு புதிய புகார் கிடைத்திருந்தது.
இதுகுறித்து போலி சித்த மருத்துவர் தணிகாசலத்திடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்து கொண்ட சைபர் கிரைம் தனி பிரிவு அதிகாரிகள், நாளையும் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனிடையே கொரோனாவிற்கு மருந்து என்று தணிகாசலம் தங்களிடம் கொடுத்த மாத்திரைகளின் புகைப்படத்தை சைபர் கிரைம் போலீசாருக்கு சிலர் அனுப்பி வைத்துள்ளனர்.