கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை முதலமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தின்போது மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்கியது.
அதன்படி, ஊரடங்கு உத்தரவை நீட்டித்தும், கட்டுப்பாடுகளை அறிவித்தும் அரசு உத்தரவுகளை பிறப்பித்தது. வரும் 17-ந்தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால், அதற்கு முன்னதாக தமிழகத்தில் கொரோனாவின் பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளார்.