தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உச்சம் எட்டிவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 200ஐ தாண்டி விட்டது. ஒரே நாளில் 3 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 64ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆவோர் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் நாளுக்கு நாள், கணிசமாக உயர்ந்து வருகிறது.
அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் 509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது
6 ஆயிரத்து 984 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, 4 ஆயிரத்து623 பேர், தனிமை வார்டுகளில் தங்கவைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததால், கொரோனா உயிர்ப்பலி 64 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சென்னையை ச்சேர்ந்த 41 வயது ஆண் ஒருவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
இதேபோல, 43 வயது ஆண் ஒருவர், சென்னை தனியார் மருத்துவமனையிலும், 48 வயது மற்றொரு ஆண், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இவர்கள்
மூவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களில், 12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை 283 சிறுவர்கள் உள்பட 529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 2 ஆயிரத்து 603 பெண்கள், 3 திருநங்கைகள் உள்பட மொத்தம் 8 ஆயிரத்து 68 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 239 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.