நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக நாமக்கல் உருவெடுத்துள்ளது.
அம்மாவட்டத்தில் மொத்தமாக 77 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், பூரண குணமடைந்த 62 பேர் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநர்கள், கர்ப்பினி பெண்கள், கூலி தொழிலாளர்கள் என மீதமிருந்த 15 பேரும் குணமடைந்ததால் அவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை வழியனுப்பி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கலை கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவித்தார்.