மதுரை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தை தொடங்குவதற்க்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த பின்னர் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், மத்திய தொழிற்படை வீரர்களுக்கு கவச உடைகள் வழங்குவது, ஊழியர்கள், பயணிகளுக்கான கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பயணச்சீட்டு சோதனை மையம், டிக்கெட் கவுண்டர்கள், காத்திருப்பு அறைகள், பயணிகள் இருக்கைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற 3 அடி இடைவெளி விட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டும் வருகிறது. பயணிகள் அனைவரையும் தெர்மல் ஸ்கிரீங்க மூலம் பரிசோதனை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.