தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பத்திரப்பதிவு துறையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசுக்கு பெருமளவு வருவாய் ஈட்டி தரும் துறைகளில் பத்திரப்பதிவு துறையும் ஒன்று. இதன் மூலம் கடந்த 2 நிதி ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், மார்ச் 25 முதல் மே 12-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஆயிரத்து 100 கோடி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக 100 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டப்பட்டுள்ளதாக பத்திர பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.