"பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இப்போது என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்வு தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தேர்வு நடத்துவதே சரியானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும் பெற்றோரையும் ஆசிரியர்களையும் மனரீதியாகத் தயார் செய்த பிறகு, தேர்வுத் தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.b