நியாய விலைக்கடைகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டதோடு நிவாரண உதவியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மே மாதத்திற்கான பொருட்களும் ரேசனில் இலவசமாக வழங்கப்பட்டது.
கடந்த வாரம் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
அந்த வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்க, 219 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.