தமிழகம் முழுவதும் 498 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரத்து 387 குடிமராமத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
4- வது ஆண்டாக செயல் படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, சென்னை , மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய 4 மண்டலங்களிலும் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் ? என ஏற் கனவே முடிவு செய்யப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
முதல் கட்டமாக, விவசாயிகள் - ஆயக்கட்டுதாரர்கள்- பாசனதாரர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்துதல், தேர்வு செய்யப்பட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்துதல், வங்கி கணக்குகள் துவக்குதல், ஜி.எஸ்.டி பதிவு செய்தல் உள் ளிட்ட முன்னேற்பாடு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
தேர்வு செய்யப்பட்ட குடிமராமத்து பணிகள் இப்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் துவக்கப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது.