அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க, கபசுர குடிநீரையும் மறு கையில் அதனை பாதிக்கும் மதுவையும் வழங்குவது முரண்பாடாக உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தாக்கல் செயப்பட்ட மனுவில், மது அருந்துதல் நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும் நிலையில் அதனை பயன்படுத்துவோர் எளிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் ஆகவே டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிப்பதோடு, எந்த வகையிலும் மது விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கோரப்பட்டிருந்தது.
வீடியோ கான்பிரன்சிங் வழியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ”டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.