கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கான ஆலோசனைகள் வழங்க, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில், உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அச்சுறுத்தல்கள் மற்றும் வாய்ப்புகளை மதிப்பிடுவது, பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மீண்டுவர தேவையான நடவடிக்கைகள், வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு எடுக்க வேண்டிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், அரசின் நிதி நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள், உள்கட்டமைப்புத் திட்டங்கள், வணிகங்கள், சிறு தொழில்களுக்கு நிதியுதவி மற்றும் நிதியாதாரங்களை கண்டறிவது தொடர்பாக, உயர்நிலைக் குழு பரிந்துரைகளை வழங்கும்.
தொழிலதிபர்கள், பொருளாதார அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் 24 பேரைக் கொண்ட இக்குழு, அரசுக்கு இடைக்கால அறிக்கையையும், 3 மாதங்களில் இறுதி அறிக்கையையும் வழங்கும்.