தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, இராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஒட்டியுள்ள பகுதிகளில் சூறை காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் அதிக அளவாகக் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறை, சிவலோகம் ஆகிய இடங்களில் 8 சென்டிமீட்டரும், கொட்டாரத்தில் 7 சென்டிமீட்டரும் கன்னியாகுமரியில் 6 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.