தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, மதுரை, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழைக்கும், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசாக பதிவாகக் கூடும் என்றும் காலை 11:30 முதல் பிற்பகல் 3:30 வரை மக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குமரிக்கடல் மற்றும் மாலத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.