திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் தவறாது குடைபிடித்து மதுபானங்களை பெற்றுச் செல்ல வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏழாம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி அளித்தது. குறிப்பாக மதுபான கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மது வாங்க வருபவர்கள் தவறாது குடையுடன் வந்து குடை பிடித்து வரிசையில் நின்று மதுபானங்களை பெற்றுச் செல்ல வேண்டும் என்றும், குடையுடன் வராதவர்களுக்கு மதுபான வகைகள் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.