ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் சந்திரசேகரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் தென்காசி மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ரிசர்வ் காவல்படைவீரர் சந்திரசேகர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குடும்பத்துக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புப் பணியில் இன்னுயிரைத் தியாகம் செய்த சந்திரசேகர் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாயை உடனடியாக வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.