கொரோனா பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக தவறான தகவல் பரப்பியவர்களுக்கு எதிராக 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்றைய விசாரணையின்போது அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட்ட விளக்கத்தை எழுத்துப்பூர்வ பதில்மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 18 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.