கொரோனா நோய் அறிகுறிகள் மிகக்குறைவாக உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவது தொடர்பாகத் தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், மிகக் குறைவான அறிகுறி உள்ளவர்கள் என மருத்துவ அதிகாரிகளால் கூறப்படுபவர்கள், நல்ல காற்றோட்டமுள்ள, கழிவறை வசதியுள்ள, தனி அறையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
தனிமையில் உள்ளவரைக் கவனித்துக்கொள்வோரும், தொடர்பில் இருப்போரும் மருத்துவரின் பரிந்துரைப்படி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
நோயாளியும், அவரைக் கவனிப்பவரும் பத்து நாட்களுக்கு துத்தநாகச் சத்து மாத்திரை, விட்டமின் மாத்திரைகள், நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. அபாய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடலாம் எனவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.