தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும் என்பதால், மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்த மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக்கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என தெரிவித்துள்ளது.