தளர்வுகளுடன் கூடிய 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு, தொற்றுநோய் பரவலுக்கு சாதகமாகவும், தடுப்பு நடவடிக்கைக்கு பாதகமாகவும் அமைந்துவிடும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பது சரியல்ல என்றும், இத்தகைய சூழலில் நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழகமும், சென்னையும் ஒன்று தான் என்று கூறும் அளவுக்கு சென்னையில் வைரஸ் பரவல் உச்சத்தை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், அடுத்து வரும் 14 நாட்களை தளர்வு காலமாக கருதாமல், தண்டனை காலமாக கருதி வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.