தமிழகம் முழுவதும் இன்று முதல் அம்மா உணகங்களில் வழங்கப்படும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏழை மக்களின் உணவு தேவையை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்களில் 3 வேளையும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியின் மூலம் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு காலக்கெடு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் முறை இன்று முதல் கைவிடப்படுகிறது. இருப்பினும், ஒரு சில இடங்களில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து இலவச உணவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.