கொரோனா எதிரொலியாக வரலாற்றில் முதன்முறையாக பக்தர்களே இல்லாமல் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள விமரிசையாக நடைபெறும், கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி சிவாச்சாரியர்கள் மட்டும் பங்குபெற நடைபெற்ற திருக்கல்யாண வைபவம், கோவிலுக்கான இணையதளத்திலும் முகநூலிலும் நேரடியாக ஒளிபரப்பானது.
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாளும் சுந்தரேஸ்வரரும் எழுந்தருள வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சியம்மனுக்கு மங்கள நாண் அணிவிக்கப்பட்டது. காலை 9.05 மணி முதல் 9.29மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.