வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர்,திருப்பூர்,மதுரை, திண்டுக்கல், தேனி,விருதுநகர், இராமநாதபுரம்,தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலை நேரங்களில் வானம் தெளிவாகவும் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28டிகிரி செல்சியஸ் ஆகி பதிவாகும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.