அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் நாளை அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது.
தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.