இ-பாஸ் எனப்படும் பயண அனுமதிச் சீட்டுப் பெறுவதற்கான புதிய நடைமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
https://tnepass.tnega.org/#/user/pass என்கிற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பாஸ் பெறலாம். மாவட்டத்துக்குள் செல்வதற்கான அனுமதிச் சீட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்டத் தொழில் மையம் அல்லது சென்னைப் பெருநகர ஆணையர் ஆகியோரால் வழங்கப்படும்.
மாவட்டங்களைக் கடந்து செல்லும் அனுமதிச் சீட்டு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் வழங்கப்படும். மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்வதற்கான அனுமதிச் சீட்டு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மட்டுமே வழங்கப்படும்.
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பித்துப் பெறலாம். தனிநபர்களுக்கான பாஸ் குடும்பத்தினரின் திருமணம், மரணம், மருத்துவத் தேவை ஆகியவற்றுக்கு மட்டுமே வழங்கப்படும்.
மருத்துவக் காரணங்களுக்கு என்றால் நோயாளியுடன் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். அதற்கு மருத்துவரின் சான்றை இணைக்க வேண்டும்.