தமிழகத்தில், பச்சை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரி ஆகும்.
பச்சை மண்டலத்தில், 50 சதவீத இருக்கைகளை குறைத்து, பேருந்துகளை இயக்கலாம். அதாவது, பணி மனைகளில் மொத்தம் உள்ள பேருந்துகளில் 50 சதவீதம் எண்ணிக்கையில் இயக்கலாம். கார்கள், மோட்டார் சைக்கிளில் செல்ல ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். பீடா கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தனித்தனி கடைகள், குடியிருப்பை ஒட்டி உள்ள கடைகளை திறக்கலாம். தங்கி இருந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொண்டு நகர்ப்புற பகுதிகளில் கட்டுமான பணிகளை துவக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏரி,கடல் பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதிக் கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தடை காலம் இருந்தால் அனுமதி மறுக்கப்படும். பச்சை மண்டலத்தில் வரும் பகுதிகளில், மதுக்கடை திறக்கலாம் என அறிவித்துள்ளது. இருப்பினும், அதுகுறித்த மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.