ஆரஞ்சு மண்டலத்தில் டிரைவருடன் அதிகபட்சமாக இரண்டு பேர், காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையே உரிய அனுமதி பெற்றே வாகனங்களில் சென்று வர வேண்டும் என மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத் தில் இடம் பிடித்துள்ளன. தமிழகத்தை பொறுத்த வரை, ஆரஞ்சு மண்டலத்தில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 24 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.