கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 20ஆம் தேதி வரை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து மொத்தம் 160 கோடியே 94 லட்சம் வரை வந்திருந்தது.
இதன் பிறகு பத்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 145 கோடியே 48 லட்சம் ரூபாய் வரப்பெற்றுள்ளது.
இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் ஆகும்.
நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், முதலமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.