வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வட உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை,சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 30முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசையொட்டியும் பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.