கொரோனா தடுப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவும், நிலவரத்தை கண்காணிக்கவும், சிகிச்சை முறைகள் தொடர்பாக ஆராய்ந்து வழிகாட்டவும் 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுடன் இரண்டாவது முறையாக முதலமைச்சர் எடப்பாடி இன்று ஆலோசனை நடத்தினார்.
துணை முதலமைச்சர் ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்வது, பாதிப்பு இல்லாத பகுதிகளில் தளர்த்துவது உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.