தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு மே 3ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பது குறித்து கடந்த 27ம் தேதி பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பாதிப்பு அதிகமுள்ள மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்கலாம் என கூறியதாக தகவல் வெளியானது. அவ்வாறு ஊரடங்கை நீட்டித்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் மே 2ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், பாதிப்பு குறைந்த பகுதிகளில் தொழில் நிறுவனங்களை இயங்க அனுமதிப்பது குறித்தும் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.